Wednesday 24 February 2016

நந்தவன நாட்கள்....


இனி சாத்தியமில்லை
என்றபோதும்…
சத்தியமாய் மறக்கமுடியவில்லை
அந்த அழகிய நாட்களை.

விரல்பிடித்து 
வீதி நடந்ததை…
நான் பட்டினிகிடந்தால்
உனக்கு பசிக்குமே…
எனக்கு காய்ச்சலென்றால்
உன் உடம்பு கொதிக்குமே…
அகராதியில் கூட இல்லாத
அழகிய சொற்களை
உன் கண்கள் பேசுமே...
அந்த வீதிகளும்…
வீடும் இன்னும் இருக்கிறது.
கடக்கும்போதெல்லாம்
மனசு கனத்துப்போகிறது…
இப்போதும்
உன் நினைவுகள் 
என் சுகமான வலிகள்
அந்த நந்தவன நாட்களின்
அழகிய கவிதையே…
உன்னையா இழந்துவிட்டேன்.
-கவிவர்மன்…

4 comments:

  1. ஆகா, கவி நந்தவன நாட்களை இந்தவன நாட்களில் நினைத்து நொந்தவன நாட்களின் கவிதையா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை இது உண்மையிலேயே நந்தவன நாட்கள் கவிதைதான் தோழர்...

      Delete
  2. கவீ... உங்கள் வலைப்பக்கத்தை என் இணைப்பில் தந்திருக்கிறென். நண்பர்களின் தளத்திற்கும்போய் நீங்களும் உங்களுக்குப் பிடித்த தளங்களை உங்கள் வலைப்பட்டியலில் இணைக்க வேண்டுகிறேன். வலையுலகம் உங்கள் படைப்புகளால் வளம்பெறட்டும். இணையத் தமிழால் இணைவோம்.

    ReplyDelete